Tuesday, August 14, 2007

புதுசா ஒர் புழு

யாகூ மெசஞ்சரிலிருந்து பேனாக் குதிர் வழியாக இப்போது பரவிவரும் வைரஸ் புழு இது.
பெயர்: W32.Svich
கண்டுகொண்ட தேதி: ஜூன் 29,1997.
இது எல்லா விண்டோஸ் பெட்டிகளையும் எளிதாய்க் கைப்பற்றிவிடும்.
DOS prompt, Task manager, registery editor, configuration editor எதையுமே பயன்படுத்த விடாது. உங்கள் விண்டோஸ் பெட்டி மிக மிக மெதுவாக செயல்படும் (அப்ப உங்க மூஞ்சியைப் பாக்கணுமே...!).
முக்கியமாக உங்கள் பேனாக் குதிர் மூலம் எளிதாக உங்கள் நண்பரின் பெட்டிக்குள்ளும் எளிதாக தாவிவிடும்.
autorun.inf என்கிற கோப்பும்(கீழே உள்ள கட்டுரையைப் படிக்க). New folder.exe என்கிற இயங்கு கோப்பும் உங்கள் பென் குதிரில் இருக்கிறதா எனக் கவனிக்கவும்.
இந்த New Folder.exe என்கிற கோப்பின் சுட்டுப்படம்(icon) windows directory icon போலவே இருப்பதால் நீங்கள் எப்பவும் போல் எளிதாக ஏமாந்து அதை க்ளிக் செய்துவிடுவீர்கள்.
அப்புறம் என்ன, உங்கள் சிஸ்டம் அதன் கட்டளைகளுக்குச் சரணடைந்துவிடும்.
ஒவ்வொரு தடவையும் நீங்கள் கணிணியை துவக்கும் பொழுதும் அது பன்மடங்காகப் பெருகி ஒவ்வொரு sub directory களுக்குள் அதே பெயரில் ஒரு இயங்கு கோப்பை எழுதிவைக்கும். SSVICHOSST.exe என்கிற ப்ரொக்ராம் உங்கள் கணிணியின் மெமரியில் நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும்.
நார்ட்டன் வைரஸ் நாசினி மூலமாய் நீங்கள் இதனிடமிருந்து விடுதலை பெறலாம்.
ஆயினும் வருமுன் காப்பது எளிது.
முந்தைய கட்டுரையின் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
இனிமேல் sub directoryகளைத் திறப்பதற்கு முன் அது உண்மையிலேயே directoryதானா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள் (right click செய்தால் explore என்கிற மெனு இருக்கவேண்டும்). முன்பின் தெரியாத செயல் கோப்புகளை உபயோகிக்க வேண்டாம். உங்கள் மின்னஞ்சல் அல்லது மெசஞ்சர் மூலமாக பெறப்பட்ட இணைப்புகளில் *.exe, *.vbs, *.pif, *.scr, *.bat போன்றவற்றை உதறிவிடுங்கள்.